சுவிஸ்

சுவிஸ் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உறவு விதிமீறல் – தீர்ப்பு வெளியானது

சுவிஸ் உச்ச நீதிமன்றம் (Bundesgericht) இரண்டு நீதிபதிகளின் உறவு விதிகளுக்கு எதிரானது என்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஒருமனதாக இந்த முடிவை எடுத்தனர்.

நீதிபதிகள் டொன்சாலாஸ் (Donzallaz), வான் டி கிராஃப் (van de Graaf) இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்தனர். உறவு ஒரு வருடத்துக்கும் குறைவாகவே நீடித்தது. இப்போது அது முடிந்துவிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இப்படி இணைந்து வாழக்கூடாது என்பது சட்டம். நீதிபதிகள் மீது பாரபட்சம் இருக்குமோ என்ற சந்தேகமே வரக்கூடாது என்பதுதான் இந்த விதியின் நோக்கம்.

கொலை முயற்சிக்காகத் தண்டிக்கப்பட்ட ஒருவரின் வழக்கை முன்வைத்து இந்தத் தீர்ப்பு வந்தது. மே மாதம் அவருடைய வழக்கை விசாரித்த குழுவில் வான் டி கிராஃப் இருந்தார். இந்த உறவைப் பற்றி அறிந்ததும் அவர் மறுபரிசீலனை கேட்டு மனு போட்டார். குழு விதிப்படி அமைக்கப்படவில்லை என்று நீதிமன்றம் இப்போது ஏற்றுக்கொண்டது. இப்படிப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர் மனு செய்தால் பழைய தீர்ப்பை மீண்டும் பரிசீலிக்கலாம்.

இதேபோல் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மனுக்கள் இன்னும் காத்திருக்கின்றன. அவற்றுக்கும் இந்தத் தீர்ப்பு தாக்கம் செலுத்தும்.

இருவரும் மீண்டும் நீதிபதி பதவிக்குப் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்றத்தின் நீதிமன்றக் குழு நவம்பரில் யாரைப் பரிந்துரைப்பது என்று முடிவு செய்யும். ஏப்ரலில் ஒரு பத்திரிகை இந்த உறவை வெளிப்படுத்தியது. அதனால் தேர்தல் டிசம்பர் குளிர்காலக் கூட்டத்தொடருக்குத் தள்ளிவைக்கப்பட்டது.


மூலம்: SRF
புகைப்படம்: Ricardo Gomez Angel / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button