தமிழீழம்

தாயகம் திரும்பியபோது கைதான முன்னாள் புலி உறுப்பினர் பிணையில் விடுவிப்பு!

இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நபர்,  இன்று (29) யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

யாழ்ப்பாணம் – மாசியப்பிட்டி, அம்மன் கோவிலடியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவராவார்.

 

கடந்த 26ஆம் திகதி இந்தியாவிலிருந்து விமானம் மூலம் இலங்கை திரும்பிய போதே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

கைது செய்யப்பட்ட நபர், மேலதிக விசாரணை மற்றும் வழக்கு நடவடிக்கைகளுக்காகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டு பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த நிலையிலேயே, நீதவான் அவரைப் பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்.

அத்துடன், வழக்கு விசாரணையின் அடுத்த தவணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட கிருஷ்ணகுமார் என்ற குறித்த  நபர் கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டு, சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார்.

அதன் பின்னர் திருச்சி சிறப்பு முகாமிக்கு மாற்றப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையிலேயே தாய்நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button