
சினிமா உலகில் ‘தல’ என அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார், ரேசிங் களத்திலும் புதிய சாதனை படைத்து தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து படைத்திருக்கிறார்.
‘அஜித் குமார் ரேசிங்’ அணி, 2026-ம் ஆண்டுக்கான மைக்கேலின் க்ரெவென்டிக் 24 மணி நேர ஐரோப்பியத் தொடரை மாபெரும் வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.

பார்சிலோனாவில் நடைபெற்ற கடினமான 24 மணி நேர ரேஸில், அஜித் குமார் ரேசிங் அணி GT3 Pro-Am பிரிவில் இரண்டாவது இடத்தை (P2) பிடித்து அசத்தியது. மேலும், இந்தத் தொடர் முழுமைக்கும் மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதன் மூலம், GT3 Pro-Am சாம்பியன்ஷிப் ஒட்டுமொத்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்து (P3) மகுடம் சூடியுள்ளது.
இந்த வெற்றி, ‘அஜித் குமார் ரேசிங்’ அணி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக சாம்பியன்ஷிப் போடியத்தில் (முதல் மூன்று இடங்களில்) இடம்பெற்றுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த மாபெரும் வெற்றி, அணியின் ஒவ்வொரு டிரைவர், பொறியாளர், மெக்கானிக் மற்றும் ஆதரவாளர் என அனைவருக்கும் சொந்தமானது என்று அணியின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொடர் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள அணி, “இன்னும் தொடர்வோம்” என்றும் அறிவித்துள்ளது.
இதனால், திரையுலகைத் தொடர்ந்து ரேசிங் உலகிலும் ‘தல’ அஜித் மாஸ் காட்டுவதைக் கண்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.





