உலகம்

கனடாவில் வங்கிக் கணக்குகளை இலக்கு வைத்து மோசடி: பொலிஸார் அவசர எச்சரிக்கை!

தங்கள் பகுதியில் அதிகரித்து வரும் புதிய வங்கிப் பணமோசடி குறித்து கொலிங்வுட் மற்றும் ப்ளூ மவுண்டன்ஸ் பொலிஸ் பிரிவினர் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வங்கியின் அதிகாரப்பூர்வ ஊழியர்கள் போல் தொலைபேசியில் தொடர்புகொள்ளும் மோசடி நபர்கள், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவோ அல்லது ஆபத்தில் உள்ளதாகவோ கூறி பயமுறுத்துகின்றனர்.

தொடர்ந்து, இணைய வங்கிப் போர்டல் எனக் கூறி ஒரு இணைப்பை வழங்கி, அதில் லாக்-இன் செய்து வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவிடுமாறு கூறுகின்றனர்.

அந்த விவரங்களைப் பயன்படுத்தி, கணக்கில் இருக்கும் பணத்தை அவர்கள் திருடி விடுகின்றனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் அல்லது அறிமுகமில்லாத இணைப்புகள் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை யாருடனும் ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி வரும் அழைப்புகளில் சிறு சந்தேகம் எழுந்தாலும், உடனடியாக அழைப்பைத் துண்டித்து விடுங்கள்.

வங்கியின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கு நீங்கள் நேரடியாக அழைத்து, அழைப்பின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டதாகச் சந்தேகப்படுபவர்கள், உடனடியாகத் தங்கள் வங்கியைத் தொடர்புகொள்வதுடன், பொலிஸாரிடமும் முறைப்பாடு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button