இலங்கை

அதிகாலையில் கைக்குண்டு தாக்குதல்; தூக்கத்திலிருந்த இரு சிறுவர்கள் பலி! இலங்கையில் கொடூரம்

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் இனந்தெரியாதோரால் இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,  வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் இருந்துள்ளனர். தாக்குதலின்போது மூன்று பேரும்  காயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 11 மற்றும் 17 வயதுகளையுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்தனர்.

அதேநேரம் உயிரிழந்த சிறுவர்களின் 55 வயதுடைய தந்தை தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைக்குண்டுத் தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்று, பாதுக்க இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button