இலங்கைதமிழீழம்தமிழ்

செம்மணியில் இன்று 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன!

யாழ்ப்பாணம் அரியாலை,செம்மணி, சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் 40ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40ஆவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை, 04  என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 11 என்புக்கூடுகள் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 94 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , மொத்தமாக 471 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 455 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

அதேவேளை இன்றைய தினம் புதன்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் 08பேர் கொண்ட குழுவினர் அகழ்வு பணியை நேரில் பார்வையிட்டதுடன், அகழ்வு பணிகளில் ஈடுபட்ட நிபுணர்குழுவினருடன் அகழ்வுபணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர் என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button