உலகம்கனடா

கனடாவில் பரவும் பரவும் புதிய தொற்று நோய்!

கனடாவின் பல்வேறு பகுதிகளில், சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கும் அமெரிக்காவில் பரவிவரும் தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

பொதுவாக, நோய்க்கிருமிகளில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற கிருமிகள் குறித்து அதிகம் பேசப்படுவதுண்டு.

ஆனால், பல நாடுகளில், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் காணப்படும் ஒட்டுண்ணி (parasite) என்னும் கிருமி குறித்து அதிகம் பேசப்படுவதில்லை.

குடற்புழுக்கள் முதல், மலேரியாவை உண்டு பண்ணும் கிருமிகள், குடல் முதல் மூளை வரை பாதிக்கும் அமீபா என்னும் கிருமிகள், இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும் ஜியார்டியா, ட்ரைக்கோமோனாஸ் என்னும் கிருமிகள், கால் பாதத்தை துளைத்துக்கொண்டு உடலுக்குள் நுழைந்து, இரத்தக்குழாய் வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து, வாய்க்கு வந்து, பின் வயிற்றுக்குள் செல்லும் கொக்கிப்புழுக்கள் என பலவகை ஒட்டுண்ணிகள் உலகில் காணப்படுகின்றன.

அப்படிப்பட்ட ஒட்டுண்ணிகளில் ஒன்றுதான் இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் கிருமித் தொற்றை ஏற்படுத்தக்கூடிய சைக்ளோஸ்போரா என்னும் கிருமி.

உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம், வாயுத்தொல்லை மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.

தற்போது அமெரிக்காவில் இந்த கிருமி அதிக அளவில் பரவிவரும் நிலையில், தற்போது கனடாவின் பல பகுதிகளிலும் அது கண்டறியப்பட்டுள்ளது.

என்றாலும், அமெரிக்கத் தொற்றுக்கும் கனேடிய தொற்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button