உலகம்

தொடர் தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு! முடிவுக்கு வருமா போர்?

அமெரிக்கா நேற்று இரவு மேற்கொண்ட புதிய தாக்குதல்களுக்கு பதிலடியாக, பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத்தாக்குதல், அமெரிக்கா தொடர்ந்து ஏழாவது இரவாக ஈரான் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாகஅறிவித்ததைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) வெளியிட்ட தகவலின்படி, போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் ஈரானின் கண்காணிப்பு மையங்கள், இராணுவ தளவாட வசதிகள், நிலத்தடிக் ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடற்படை திறன்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.

ஈரான் அரசு ஊடகங்களின் தகவலின்படி, லார், ஜாஸ்க், சிரிக், புஷெர், பந்தர் அப்பாஸ், கேஷ்ம் தீவு, அஹ்வாஸ் மற்றும் யஸ்த் உள்ளிட்ட பல பகுதிகள் தாக்கப்பட்டுள்ளன.

ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் குறைந்தது 3 பேர் உயிரிழந்ததுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்த மாகாணம் ஹோர்முஸ் நீரிணையை ஒட்டியுள்ள பகுதி ஆகும்.

அல் ஜசீரா வெளியிட்ட தகவலின்படி, ஈரான் அமெரிக்க இராணுவ இலக்குகளை தாக்கியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத்தில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளில் மோதியதால் இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடித்துச் சிதறின என்ற ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) வெளியிட்ட தகவலை அமெரிக்க மத்திய கட்டளை முற்றாக மறுத்துள்ளது.

அத்தகைய தகவல்கள் பொய்யானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button