இலங்கைசர்வதேசம்சுவிஸ்

ஐ.நா. AI ஆளுகை மாநாட்டில் இலங்கை பங்கேற்பு

ஜனாதிபதியின் விசேட தூதுவரும், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதம ஆலோசகருமான டாக்டர் ஹன்ஸ் விஜயசூரிய தலைமையிலான உயர்மட்ட இலங்கை பிரதிநிதிகள் குழு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள Palexpoவளாகத்தில் ஜூலை 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) ஆளுகை உரையாடலில் தீவிரமாக பங்கேற்றுள்ளனர்.

ஐ.நா. பொதுச் சபையின் A/RES/79/325 தீர்மானத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த Global Dialogue on AI Governance, செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஐ.நா. தலைமையிலான உலகின் முதல் பொதுவான தளமாகும்.

மாநாட்டின் தொடக்க அமர்வில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் அன்னலேனா பேர்பொக் ஆகியோர் உரையாற்றி, நியாயமானதும் பாதுகாப்பானதுமான உலகளாவிய டிஜிட்டல் ஒழுங்கை உருவாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.

இந்நிகழ்வில், டிஜிட்டல் சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஆளுகை குறித்த இலங்கையின் உறுதிப்பாட்டை மீள வலியுறுத்திய பிரதிநிதிகள் குழு, செயற்கை நுண்ணறிவு தொடர்பான சர்வதேச கொள்கை மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குவதில் இலங்கை பங்களிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தது.

இலங்கை பிரதிநிதிகள் குழுவில்,

  • ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தூதுவர் சுமித் தசநாயக்க,
  • இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற விமானப் படை வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத்,
  • மற்றும் ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கு மேலாக, ஜூலை 6 முதல் 10 வரை நடைபெற்ற World Summit on the Information Society (WSIS) Forumமற்றும் AI for Good Global Summit 2026 உள்ளிட்ட முக்கிய சர்வதேச நிகழ்வுகளிலும் இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்று, டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய விவாதங்களில் இலங்கையின் குரலை  பதிவு செய்தனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button