இலங்கை

நீர்கொழும்பு சிறை கைதிகளின் நீதிமன்ற விசாரணைகள் இனி Zoom மூலம்

இலங்கை நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் நீதிமன்ற விசாரணைகள், நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமைவாக Zoom காணொளி தளத்தின் மூலம் இணையவழியில் நடத்தப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க கூறுகையில், இணையவழி விசாரணைகளை ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில், சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 29 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பல கைதிகள் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், அவர்களை நேரடியாக நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து, அவர்களின் நீதிமன்ற விசாரணைகளை Zoom மூலம் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகாரிகள் தெரிவிக்கையில், தற்போதும் சுமார் 600 கைதிகள் நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ளனர். அவர்களும் விரைவில் பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button