இலங்கைதமிழீழம்தமிழ்மருத்துவம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதிக்கு கடும் தட்டுப்பாடு

கொடையாளர்களிடம் அவசர வேண்டுகோள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்துவகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொடையாளர்கள் குருதி தந்து உதவுமாறு இரத்த வங்கியால் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய குருதி இருப்பு 330 பைந்துகள் ஆகும். ஆனால், இன்று எமது இரத்த வங்கியில் 192 பைந்துகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. இது எமது இரத்த வங்கியைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தானதும் கவலைக்கிடமானதுமான நிலையாகும்.
தொடர்ச்சியாக இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டாலும், நோயாளர்களுக்கான குருதி விநியோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தேவையான குருதி இருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட சில இரத்ததான முகாம்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்படுவதும் இந்த நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
அதேபோன்று, எமது வைத்தியசாலை பணியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த ஏப்ரல் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்றதால், அவர்களும் இன்னும் நான்கு மாதங்களை பூர்த்தி செய்யாத காரணத்தால் அவர்களிடமும் உடனடியாக உதவி கோர முடியாதுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், நோயாளர்களுக்குத் தேவையான குருதியை வழங்குவதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை அதிபர்கள், நலன் விரும்பிகள் மற்றும் இரத்ததான முகாம் ஏற்பாட்டாளர்கள் ஆகிய அனைவரும் தங்கள் அலுவலகங்களிலோ அல்லது பொருத்தமான இடங்களிலோ இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து எமக்கு அறிவித்தால், எமது இரத்த வங்கி குழுவினர் அந்த இடத்திற்கு வருகை தந்து இரத்ததான முகாமை நடத்தி, நோயாளர்களுக்குத் தேவையான குருதியை சேகரிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வார்கள்.
மேலும், பொதுமக்கள் குழுவாகவோ அல்லது தனித்தனியாகவோ யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு தினமும் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, விக்டோரியா வீதியில் அமைந்துள்ள 12ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக வருகை தந்து இரத்ததானம் செய்து, உயிர்களைக் காக்கும் இந்த உன்னத மனிதாபிமானப் பணிக்கு தங்களின் பெறுமதியான பங்களிப்பை வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
“ஒரு பைந்த் குருதி – பல உயிர்களின் நம்பிக்கை
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button