இந்தியா

இந்திய வயநாட்டில் மீண்டும் பாரிய மண்சரிவு;மண்ணுக்குள் சிக்கிய தொழிலாளர்கள்!

இந்தியா கேரளா வயநாடு மேப்பாடி அருகே கல்லடியில் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் கனமழை பெய்ததால் இன்று மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் 20 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கேரள மாநிலம் வயநாடு அருகே கல்லடியில் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறும் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண்ணுக்கடியில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை, வயநாடு பகுதியில் அதிகரித்துள்ளதால் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மேப்பாடி அருகே சூரல்மலை பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஏற்பட்ட மண் சரிவில் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டதுடன், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் மண்சரிந்து விபத்து ஏற்பட்டிருப்பது வயநாடு பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button