இலங்கை

சர்வதேச சந்தை மாற்றங்களால் தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (01) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

 

சர்வதேச சந்தை தரவுகளின்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 3,978.5 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளியின் விலை ஒரு அவுண்ஸ் 57.8 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்க விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சி காரணமாக இலங்கையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

உலக சந்தை நிலவரங்கள் தொடர்ந்து மாற்றம் காணும் நிலையில், வருகிற நாட்களில் விலை நிலைமை மேலும் மாறக்கூடும் எனவும் சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button