
நடத்துகிறார்கள். இதனை நாம் எவ்வாறு சகித்துக் கொள்வது? மக்கள் எங்களை விட்டு விலகிப் போவதற்கு இத்தகைய போலித்தனமான அரசியலே முதன்மைக் காரணமாகும்.
நான் நெஞ்சை நிமிர்த்திச் சொல்வேன், கிளிநொச்சியில் உள்ள 40 வட்டாரங்களில், 13 வட்டாரங்கள் இன்று போராளிகளின் கைகளில்தான் உள்ளன. அவர்களின் குடும்பங்களை மையப்படுத்தியே நாம் எமது அரசியலை முன்னெடுத்து வருகிறோம்.
கிளிநொச்சி மண் இன்று நிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு மாவீரர்களது தியாகமும், போராளிகள் சிந்திய இரத்தமுமே காரணம். எனவே, போராளிகள் எமது சமூகத்தைத் தலைமை தாங்கட்டும்; நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எமது அரசியலை மேற்கொள்வோம்.” எனத் குறிப்பிட்டுள்ளார்.





