உலகம்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சரிவு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (17) குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து, ஒரு கொள்கலன் எண்ணெயின் விலை 80 அமெரிக்க டொலர் என பதிவாகியுள்ளது.

 

 

 

அதன்படி, WTI ரக மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 76.28 அமெரிக்க டொலர் என குறைந்துள்ளது.

 

 

 

அதேவேளை, ப்ரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 79.13 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

 

 

 

மேலும், மர்பன் (Murban) ரக மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 7.02 சதவீதம் வீழ்ச்சியடைந்து 71.81 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

 

 

 

மத்திய கிழக்கு நாடுகளில் போர் தொடங்கிய ஆரம்ப காலத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 68 முதல் 70 அமெரிக்க டொலர் வரையிலான அளவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button