
பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு அருகில் அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் முகமாக, அமெரிக்க வானூர்தி தளம் ஒன்றை இலக்கு வைத்து தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட துல்லியமான இடத்தை ஈரான் வெளிப்படுத்தாத போதிலும், இன்று (28) அதிகாலை வேளையில் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்தி மூலமாக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தாம் பதிலடி கொடுத்துள்ளதாக குவைத் நாடு தெரிவித்துள்ளது.





