உலகம்

அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதே அமெரிக்காவிற்கு மிகக் குறைந்த செலவைக் கொடுக்கும் தெரிவாகும் என ஈரானின் ஆன்மீகத் தலைவரின் இராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) தெரிவித்துள்ளார்.

 

 

 

ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர், ஹோர்முஸ் நீரிணை மீதான தனது இறையாண்மைக்கு ஈரானிடம் வலுவான சட்ட மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் இந்த மேலாண்மை என்பது சுதந்திரமான வர்த்தகத்தைத் தடுப்பதற்கல்ல, மாறாக பாதுகாப்பற்ற நிலைமைகளையும் இராணுவப் பிரசாரங்களையும் தடுப்பதற்காகவே ஆகும் என இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முன்னாள் தளபதியுமான மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து போர் நீடிக்குமாயின், அது அமெரிக்கப் பொருளாதாரத்தையும் அந்தநாட்டு மக்களையும் அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்லும் என எச்சரித்துள்ள அவர், எனவே ஈரான் முன்மொழிந்துள்ள நியாயமான பேச்சுவார்த்தை மேசையை ஏற்றுக்கொள்வதே அமெரிக்காவிற்கு மிகக் குறைந்த செலவைக் கொண்ட வழியாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button