அரசியல்

இலங்கை ரூபாய் கடுமையான அழுத்தத்தில் உள்ளது: சஜித் கவலை

இலங்கை ரூபாய் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனைத் தீர்ப்பதற்கான தெளிவான திட்டமோ அல்லது பதிலோ அரசாங்கத்திடம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

 

அவர் தனது எக்ஸ் பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை குறித்து அவசர நாடாளுமன்ற விவாதமொன்றை நடத்துமாறு கோரி, தானும் ஏனைய கட்சித் தலைவர்களும் சபாநாயகரைச் சந்தித்துள்ளதாக அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

அத்துடன், மக்களுக்கு உண்மையாக இருக்குமாறும், தற்போதைய நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தனது பதிவின் மூலம் வலியுறுத்தியுள்ளார்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button