
சவூதி அரேபியாவுக்கு எதிரான அண்மைய ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை பாகிஸ்தான் கடுமையான சொற்களால் கண்டித்துள்ளது.
இந்தநிலையில் பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சகம், ரியாத்துக்கான தனது “அசைக்க முடியாத ஆதரவை” மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தகைய தாக்குதல்கள் சவூதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை கடுமையாக மீறும் செயல்களாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இவை பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேலும் சீர்குலைப்பதற்கான ஒரு முயற்சியாகவே தோன்றுகின்றன என்றும் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.





