
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று திங்கட்கிழமை ஒரு கைக்குழந்தை உட்பட மேலும் 4 என்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் அடையாளம் காணப்பட்ட 4 என்புகள் அகழ்ந்தும் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 4 என்புக்கூடுகளுடன் சேர்த்து அப்புதைகுழியில் மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ள என்புக்கூடுகளின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அங்கு இன்று புதிதாக அகழ்ந்து எடுக்கப்பட்ட அந்த என்புக்கூட்டுத் தொகுதியுடன் சேர்த்து அங்கு மொத்தமாக அகழ்ந்து எடுக்கப்பட்ட என்புக்கூடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.





