
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (04) நடைபெறுகிறது.
234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்? என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தநிலையில் தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு பிரதான ஜோதிடர் பூங்கொத்துடன் வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை விஜய் வெளியே செல்லும் போது அவரை பின்தொடர்ந்து ரசிகர்கள் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளதுடன் விபத்துக்குள்ளாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் பணியில் 300 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





