இந்தியா

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அஞ்சல் வாக்குகளில் திமுக முன்னிலை

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

அதன்படி அஞ்சல் வாக்கு எண்ணிக்கையில் 94 இடங்களில் 67 இடங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் முன்னிலை வகிக்கிறது.

 

இரண்டாவதாக 19 இடங்களில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது

மூன்றாவதாக 8 இடங்களில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில், பாரதீய ஜனதாக் கூட்டணி 113 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

 

திரினாமுல் காங்கிரஸ் 91 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

 

கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 45 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது.

 

இடதுசாரி ஜனநாயக முன்னணி 27 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button