இந்தியா

சமையல் எரிவாயு முன்பதிவில் இன்று முதல் புதிய விதிமுறைகள் அமுல்!

இந்தியாவில் எல்பிஜி சமையல் எரிவாயு கொள்கலன்களை முன்பதிவு செய்யும் முறை மற்றும் அதனை விநியோகிக்கும் முறைகளில் புதிய விதிமுறைகள் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால், ஏற்கனவே எரிவாயு கொள்கலன் முன்பதிவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டால், ஏற்கனவே எரிவாயு கொள்கலன் முன்பதிவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன.

 

 

 

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றத்திற்குப் பிறகு, வீட்டு உபயோக எரிவாயு கொள்கலன்களின் விலை 60 ரூபாய் வரை (இந்திய மதிப்பில்) உயர்ந்துள்ளது.

அதேபோன்று, வணிக பயன்பாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலை ஏப்ரல் மாதத்தில் மட்டும் மூன்று கட்டங்களாக நகரங்களுக்கு ஏற்ப 196 ரூபாய் முதல் 218 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 

ஒரு எரிவாயு கொள்கலனை முன்பதிவு செய்து, அடுத்த கொள்கலனை முன்பதிவு செய்வதற்கான குறைந்தபட்ச இடைவெளி நகரங்களில் 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் இந்த இடைவெளி 45 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே தற்காலிக அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒரு முறை கடவுச்சொல்’ (OTP) அடிப்படையிலான விநியோக முறை, இனி நிரந்தரமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, கொள்கலன் மூலமான விநியோகத்தை படிப்படியாகக் குறைத்து, விரைவில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் முறையை (PNG) உருவாக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button