
செம்மணி சித்துப் பாத்தி இந்துமயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாவது நாள் அகழ்வு பணிகளானது இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேலும் சில மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.
மனித புதைகுழியின் வடமேற்கு பகுதியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுப்பணியின் போதே, இந்த என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவிக்கின்றார்.





