இந்தியா

தமிழக சட்டசபைத் தேர்தல்- தி.மு.க கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், ‘People Pulse – NDTV’ இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

இதன்படி, தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தந்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ள இந்தக் கருத்துக்கணிப்பின் படி

 

ஆளுங்கட்சியான தி.மு.க தலைமையிலான கூட்டணி 125 முதல் 145 வரையான தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு 65 முதல் 80 வரையான தொகுதிகள் கிடைக்கப்பெறலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்துள்ள நிலையில், அக்கட்சி 18 முதல் 24 தொகுதிகள் வரை வென்று தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

 

ஏனைய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 02 முதல் 06 வரையான தொகுதிகளைக் கைப்பற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையின் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், ஆட்சியமைப்பதற்கு 118 தொகுதிகள் பெரும்பான்மையாகத் தேவைப்படும் நிலையில், தி.மு.க கூட்டணி அந்த இலக்கைத் தடையின்றித் தாண்டும் என இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

 

 

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button