
நாட்டின் பல மாகாணங்களில் இன்று இரவு பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (29) இரவு 11.30 மணி வரை மேல், சபரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்துக்கும் இந்த முன்னெச்சரிக்கை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்களைத் தவிர்க்க பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
* வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நீர்நிலைகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்கவும்.
மின்னல் தாக்கத்தின் போது மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் ஏனைய மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
* பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மரங்கள் அல்லது மின்கம்பங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்கவும்.
இதேவேளை, அவசர காலங்களில் பிரதேசத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலையங்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.





