
காரணமாக எரிபொருள் விலைகள் உயர்வதும், விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படுவதும், இலங்கை போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் நீண்டகால எரிசக்தி சேமிப்பு திறன் மற்றும் விநியோக பாதுகாப்பு மிகவும் அவசியமாகியுள்ளது.
மேலும், இந்தத் திட்டம் இந்தியா-இலங்கை உறவில் புதிய பரிமாணத்தையும் பிரதிபலிக்கிறது. முன்பு உதவி மற்றும் கடன் அடிப்படையில் இருந்த உறவுகள், தற்போது முதலீட்டு மற்றும் பொருளாதார கூட்டாண்மையாக மாறிவருகின்றன. கொழும்பு துறைமுகம் உட்பட பல திட்டங்களில் இந்திய முதலீடுகள் அதிகரித்திருப்பது இதற்கு சிற்நத உதாரணமாகும். திருகோணமலை திட்டம் இந்த மாற்றத்தின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
எனினும், இந்தத் திட்டம் இன்னும் பல சவால்களை எதிர்கொள்வதாக உள்ளது. குறிப்பாக திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர மிகப்பெரிய நிதி தேவைகள் உள்ளன. அத்துடன், தொழில்நுட்ப சிக்கல்கள், வணிக மாதிரி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படாத நிலை மற்றும் பழைய கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க வேண்டிய அவசியம் ஆகியவை முன்னேற்றத்தை தாமதப்படுத்துகின்றன.
1930களில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்தத் எண்ணெய் தொட்டி வளாகத்தின் அடிப்படை வசதிகளை மீளமைப்பது ஒரு பாரிய சவாலாக கணிப்பிடப்பட்டுள்ளது.
என்றாலும், தற்போதைய நெருக்கடியான நிலையில் திருகோணமலை எண்ணெய் தொட்டி திட்டம் இலங்கையின் பொருளாதார பாதுகாப்பிற்கும், எரிசக்தி சுயாதீனத்திற்கும், பிராந்திய மூலோபாய முக்கியத்துவத்திற்கும் அவசர முன்னுரிமையாக மாறியுள்ளது.
இதனால் இந்தத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை அரசாங்கம் விரைவுப்படுத்தியுள்ளது. இதுகுறித்து கலந்துரையாட அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் புதுடில்லிக்குப் பயணிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எண்ணெய் தொட்டி வளாக திட்டம் இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு முக்கிய அடித்தளம். இத்திட்டம் விரைவாகவும் திறமையாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது இலங்கையை தெற்காசியாவின் முக்கிய எரிசக்தி மையமாக மாற்றும் திறன் கொண்டதாக மாற்றும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.





