உலகம்

கடைசி மூச்சு வரை எதிரியுடன் போர்!” – ஈரான் இராணுவத் தளபதி அதிரடி எச்சரிக்கை!

நாட்டின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்காக கடைசி மூச்சு வரை எதிரிகளை எதிர்த்துப் போரிடத் தயாராக இருப்பதாக ஈரானிய இராணுவத் தளபதி அமீர் ஹடாமி (Amir Hatami) சூளுரைத்துள்ளார்.

 

நிலம், வான் மற்றும் கடல் என அனைத்து எல்லைகளின் பாதுகாப்பையும், நாட்டின் இறையாண்மையையும் உறுதிப்படுத்துவதில் இராணுவம் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

 

இராணுவத் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகவும், எந்தவொரு சவாலையும் தீர்க்கமாக எதிர்கொள்ள மற்ற பாதுகாப்புப் பிரிவுகளுடன் இணைந்து இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈரானியப் படைகள் பணியாற்றுவதாகத் தெரிவித்த அவர், படைகள் எந்நேரமும் போருக்குத் தயாராக (Finger on the trigger) இருப்பதாக எச்சரித்துள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button