இலங்கை

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை – பயணிகளுக்கான விசேட அறிவுறுத்தல்!

பேருந்துப் பயணிகளிடம் சட்டவிரோதமான முறையில் அதிக கட்டணம் வசூலிக்கும் அல்லது பயணச்சீட்டுகளை வழங்க மறுக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

 

பயணிகள் தமக்கு நேரும் அசௌகரியங்கள் குறித்து பின்வரும் வழிகளில் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற 24 மணிநேர நேரடி அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு புகார்களை அளிக்கலாம்.

 

அண்மையிலுள்ள காவல்துறை நிலையங்களில் பேருந்தின் விபரங்களுடன் முறைப்பாடு செய்யலாம்.

 

வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அல்லது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அலுவலகங்களில் நேரடியாக தகவல்களை வழங்கலாம்.

 

இந்த விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி வரை 24 மணிநேரமும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button