உலகம்

உலகை ஒரு சில ‘சர்வாதிகாரிகள்’ ஆளுகின்றனர் – திருத்தந்தை லியோ கடும் விமர்சனம்!

உலக நாடுகள் போருக்காக பில்லியன் கணக்கான டொலர்களைச் செலவிடுவதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை 14 ஆம் லியோ (14 ஆம் சிங்கராயர் ) , உலகம் தற்போது ஒரு சில “சர்வாதிகாரிகளால்” சீரழிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

 

 

 

கெமரூன் குடியரசுக்கான பயணத்தின் போது அவர் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக வலைத்தளங்களில் திருத்தந்தையைத் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திருத்தந்தையின் இந்த உரை அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

 

அழிவுக்காகவும் கொலைகளுக்காகவும் பில்லியன் கணக்கான டொலர்களைச் செலவிடும் உலகத் தலைவர்கள், மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் மறுசீரமைப்புக்கான நிதியை வழங்கத் தவறிவிட்டதாகத் திருத்தந்தை குற்றம் சாட்டினார்.

 

“அழிப்பதற்கு ஒரு நிமிடம் போதுமானது, ஆனால் சிதைந்ததை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு வாழ்நாள் கூடப் போதாது என்பதை யுத்தப் பிரபுக்கள் (Masters of war) அறியாதது போல நடிக்கின்றனர்” என்று அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button