உலகம்

அமெரிக்கக் கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் : ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் கடும் எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றால், அங்கிருக்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்களை ஈரான் ஏவுகணைகள் மூலம் மூழ்கடிக்கும் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் இராணுவ ஆலோசகர் மொஹ்சன் ரெசாய் (Mohsen Rezaei) எச்சரித்துள்ளார்.

 

ஈரானால் ஹோர்முஸ் நீரிணை ஊடாக மேற்கொள்ளப்படும் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா தற்போது அந்தப் பகுதியில் கடற்படை முற்றுகையை அமுல்படுத்தி வருகிறது.

 

இது குறித்து அரசு தொலைக்காட்சி ஒன்றுக்குக் கருத்து தெரிவித்த மொஹ்சன் ரெசாய்,

 

ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையின் காவல்துறையாக மாற விரும்புகிறார். இது உண்மையிலேயே உங்கள் வேலையா? அமெரிக்கா போன்ற ஒரு வலிமையான இராணுவத்தின் வேலை இதுதானா?” எனக் கேள்வி எழுப்பினார்.

 

அமெரிக்காவின் இந்தப் போர்க்கப்பல்கள் ஈரானின் முதல் ஏவுகணைத் தாக்குதலுக்கே மூழ்கடிக்கப்படும் என்றும், இவை அமெரிக்க இராணுவத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

அமெரிக்கக் கப்பல்கள் ஈரானின் ஏவுகணை இலக்குகளுக்கு மிக அருகில் இருப்பதாகவும், அவற்றை அழிக்கும் திறன் ஈரானிடம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

ஈரானின் புரட்சிகர இராணுவப் படையின் முன்னாள் தலைமைத் தளபதியான (1981 – 1997) மொஹ்சன் ரெசாய், ஈரானின் மூத்த இராணுவ நிபுணர்களில் ஒருவராவார்.

 

கடந்த மாதம் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியினால் இவர் இராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

 

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் இந்த நேரடித் தாக்குதல் எச்சரிக்கை பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

 

வரும் ஏப்ரல் 21 அன்று போர்நிறுத்தம் முடிவடையவுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு விவகாரம் ஒரு முக்கிய மோதல் புள்ளியாக மாறியுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button