
ஈரான் போருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த திருத்தந்தை 14 ஆம் லியோவை (Pope Leo XIV) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளதாக பிபிசி செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு மாதங்களில் ஈரான் 42,000 அப்பாவிப் போராட்டக்காரர்களைக் கொன்றுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
யாராவது தயவுசெய்து லியோவிடம் இதைச் சொல்லுங்கள். இந்தக் கவனத்திற்கு நன்றி. அமெரிக்கா மீண்டுவிட்டது என அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திருத்தந்தை குற்றங்களைத் தடுப்பதில் மெத்தனமாக இருப்பதாகவும் அவரது வெளியுறவுக் கொள்கைகள் மிக மோசமானவை என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்
இந்த நிலையில், ட்ரம்ப்பின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள திருத்தந்தை லியோ, தாம் ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டு “அச்சமடையவில்லை” என்றும், அமைதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மேலும், நேட்டோ அமைப்பு தொடர்பிலும் அதிருப்தியை வெளிப்படுத்திய ட்ரம்ப், நேட்டோ நமக்காக இருக்கவில்லை, இனியும் இருக்கப்போவதில்லை” என அவர் பதிவிட்டுள்ளார்.





