
ஈலோன் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையக் கட்டமைப்புகள் இனி ஈரானின் “நியாயமான இலக்குகளில்” ஒன்றாகக் கருதப்படும் என ஈரான் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளில் ஸ்டார்லிங்க் இருப்பதைச் சுட்டிக்காட்டி ‘பார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரானில் ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
இதைப் பயன்படுத்துபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் நிலவும் தொடர்ச்சியான இணைய முடக்கங்களுக்கு மத்தியில், பொதுமக்கள் வெளியுலகத்துடன் தொடர்புகொள்வதற்காக ஸ்டார்லிங்க் சேவையை இரகசியமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயற்கைக்கோள் இணைய சேவையானது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக ஈரான் கருதுகின்றது.
தொடர்ச்சியான போர்ச் சூழல் மற்றும் உள்நாட்டுப் போராட்டங்களுக்கு மத்தியில், இணையக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஸ்டார்லிங்க் முயன்று வரும் வேளையில் ஈரானின் இந்த அறிவிப்பு பதற்றத்தை அதிகரித்துள்ளது.





