இலங்கை

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் – அதி உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வெளியானது

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 3ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

இதன்படி, 8,300 மாணவர்கள் 3ஏ அதி உயர் சித்திகளைப் பெற்றுள்ளனர்.

 

இவற்றுள், 7,477 பாடசாலை பரீட்சார்த்திகளும், 823 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

மேலும், வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், 176,527 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 11 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இதேவேளை, வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், அனைத்துப் பாடங்களிலும் சித்திப் பெறாத மாணவர்களின் எண்ணிக்கை 30,898 என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இவர்களுள், 19,301 பாடசாலை பரீட்சார்த்திகளும், 11,597 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குவர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button