இலங்கை

இலங்கையில் இன்று அதிக வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்து வருவதால், வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது.

 

எனினும், இந்த எச்சரிக்கை காலதாமதமாக விடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன

இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையத்தினால் வெளியிடப்பட்ட இந்த ஆலோசனையின்படி, பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு “எச்சரிக்கை மட்டத்தை” எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது:

 

மேல், சபரகமுவா, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், மொனராகலை மாவட்டம் ஆகிய இடங்களிலே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பொதுமக்கள் ஏற்கனவே கடும் வெப்பத்தினால் அன்றாட வாழ்வில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு மிகவும் தாமதமானது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

முன்கூட்டியே இவ்வாறான எச்சரிக்கைகளை வழங்குவதன் மூலம் பாதிப்புகளைக் குறைத்திருக்க முடியும் என அவர்கள் வாதிடுகின்றனர்.

 

.வெப்ப அலைகளால் ஏற்படக்கூடிய நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெப்பச் சோர்வு போன்றவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள சுகாதார நிபுணர்கள் பின்வரும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்:

 

 

எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் உயர்வாகவே காணப்படும் என்பதால் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button