இலங்கை

QR குறியீட்டைப் பெற மீண்டும் முயற்சிக்குமாறு அறிவுறுத்தல்

எரிபொருள் விநியோகத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

 

தற்போது சுமார் 10,000 பேரைத் தவிர ஏனைய அனைவரும் தமக்குரிய QR குறியீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

 

இதன்படி, இதுவரை 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் QR குறியீட்டைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

பதிவு செய்யும் போது சிலருக்கு மாத்திரம் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பெரும்பாலான தொழில்நுட்பப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதால் மீண்டும் முயற்சிப்பதன் மூலம் இந்த QR குறியீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button