
தற்போது நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, இன்று (18) முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ச. நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அமைச்சர் இதனை தெரிவித்தார்..
மேலும், உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை அதிகரித்தால், மக்கள் மீது முழுமையாகச் சுமையை ஏற்றாமல், சில செலவுகளை ஏற்றுக்கொள்வதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.





