விளையாட்டு

தேசியக் கொடியை அவமதித்ததாக ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக முறைப்பாடு

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், இந்திய தேசியக் கொடியை அவமதித்ததாகக் கூறி இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

உலகக் கிண்ண வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, ஹர்திக் பாண்டியா தேசியக் கொடியைத் தனது உடலில் போர்த்தியிருந்த விதம் மற்றும் கையாண்ட முறை ஆகியவை தேசியக் கொடியை அவமதிப்பதாகக் கூறி சமூக ஆர்வலர் ஒருவரால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வீரர்கள் மைதானத்தில் உணர்ச்சிப்பூர்வமாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

 

இதன்போது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்திய தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Insults to National Honour Act) நடவடிக்கை எடுக்குமாறு அந்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button