இலங்கை

பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு

பதுளை மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.

 

கடந்த காலங்களில் பதுளை மாவட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபரால் முன்னெடுக்கப்பட்ட சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

 

இவரின் சேவை தொடர்ந்தும் பதுளை மாவட்டத்திலேயே நீடிக்க வேண்டும் எனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இன்றைய தினம் காலை 12.00 மணி முதல் 12.30 மணி வரை, பதுளை மாவட்ட செயலகம் முன்பாக, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

 

மாவட்ட அரசாங்க அதிபர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு இதன்போது பொது மக்கள் கண்டனத்தையும் வெளியிட்டனர்.

 

மாவட்ட அரசாங்க அதிகாரிகள், அரச சேவையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து அமைதியான வகையில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

 

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அரசாங்க அதிபரை அவசரமாக இடமாற்றம் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென கூறிய பொது மக்கள் இந்த இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, அவரை மீண்டும் பதுளை மாவட்டத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button