இலங்கை

தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு : இன்று முதல் வழமைக்குத் திரும்பும் சேவைகள்!

டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட புத்தளம் மார்க்கத்தின் ஊடான தொடருந்து சேவைகள், இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

 

இதற்கமைய, புத்தளம் தொடருந்து மார்க்கம் இன்று முதல் முழுமையாகத் திறக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இந்தநிலையில், கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் வரை தொடருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

முன்னதாக, கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்ட தொடருந்து சேவைகள், சிலாபம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

 

இந்தநிலையில், இன்றைய தினம் முதல் புத்தளம் வரை சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button