இலங்கை

மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு வலயம் உருவாகும் சாத்தியம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடல் பிராந்தியத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி அளவில் புதிய காற்றழுத்தத் தாழ்வு வலயம் (Low Pressure Area) ஒன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதனால் நாட்டின் வானிலை மற்றும் கடல் பிராந்தியங்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவான பின்னர் அதன் நகர்வு மற்றும் தாக்கங்கள் குறித்து வானிலை ஆய்வுத் திணைக்களம் உடனுக்குடன் அறிவிப்புகளை வழங்கும்.

 

மீனவர்கள், கடற்படையினர் மற்றும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வானிலை திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சமூக வலைத்தளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகளை நம்பாமல், உத்தியோகபூர்வ வானிலை அறிக்கைகளை மாத்திரம் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button