
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோகிராம் கஞ்சா, தமிழ்நாட்டின் இராமநாதபுரம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.
கியூ-பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, விசேட வீதி போக்குவரத்து சோதனை மேற்கொள்ப்பட்ட போது, 97 மூடைகளில் மறைத்து வைக்கப்பட்ட 194 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா கொண்டுசெல்லப்பட்ட வாகனத்தின் சாரதியும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கஞ்சா தொகை சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





