இலங்கை

நெடு நாள் மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் டிக்கோவிட்ட துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்

தெற்கு கடலில், மீட்கப்பட்ட 270 கிலோவுக்கும் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரண்டு நெடு நாள் மீன்பிடி படகுகளுடன் கைது செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களும் இன்று டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 

குறித்த நெடுநாள் படகுகளில், இருந்து மீட்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொகையை, ‘தெஹிபால’ என்பவர் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

 

. முன்னதாக, காவல்துறை அதிபருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின்போது, சுமார் 200 கிலோ கிராம் போதைப்பொருட்களுடன், ஒரு நெடுநாள் மீன்பிடிப் படகும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

 

குறித்த கடற்பரப்பில், மேலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக, போதைப்பொருள் கடத்தப்படுவதாகச் சந்தேகிக்கப்படும் மற்றுமொரு நெடுநாள் மீன்பிடிப் படகையும் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

 

குறித்த படகிலிருந்து ஆறு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், இரண்டு செய்மதித் தொலைபேசிகளையும் கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button