தமிழீழம்

அமெரிக்காவை மறந்த தமிழ் கட்சிகள்: வவுனியா போராட்டத்தில் விமர்சனம்

யாழ்ப்பாண விமான நிலையத்தில் அண்மையில் மனிதாபிமான உதவிகளை வழங்கிய அமெரிக்காவுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்ததோடு, தமிழ் மக்களின் இறைமையை மீட்டெடுக்க சர்வதேச நாடுகளின் ஆதரவையும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன், தமிழ் மக்களின், எமது இறைமையை மீட்டெடுக்க வலுவான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் உருக்கமாகக் கோரிக்கை விடுத்தனர்.

 

 

இதனிடையே, யாழ்ப்பாண விமான நிலையத்தில் இருமுறை பெரிய இராணுவ விமானங்கள் மூலம் அமெரிக்கா மனிதாபிமான உதவிகளை வழங்கியபோது, அதனை எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியோ அல்லது சிவில் அமைப்புகளோ அங்கீகரிக்கவோ அல்லது நன்றி தெரிவிக்கவோ இல்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 

புத்தாண்டு தினமான இன்று வவுனியாவில் 3,237-வது நாளாகத் தொடரும் தமது சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அந்த சங்கத்தின் உறுப்பினர்கள், “காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் குறித்த உண்மையை வெளிப்படுத்த அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தத் தீவு பண்டைய தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. தமிழ் மக்கள் சைவத்தையும், பின்னர் தமிழ் பௌத்தத்தையும் பின்பற்றியதற்கான ஆதாரங்கள் மணிமேகலை போன்ற இலக்கியங்களில் உள்ளன.
மாறாக, மகாவம்சத்தைக் காட்டி தமிழர் நிலங்களை உரிமை கோருவது வரலாற்று அடிப்படை அற்றது. வடக்கு – கிழக்கு என்பது அதன் வரலாறு மற்றும் கலாசாரத்தின் அடிப்படையில் தமிழ் தேசத்திற்கே சொந்தமானது” எனவும் அவர்கள் தமது நிலைப்பாட்டைத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button