மலையகம்

கொழுந்து பறிக்கும் கைகள் கொடுத்த கொடை – வியக்க வைக்கும் மனிதாபிமானம்

ஹட்டன் – பொகவந்தலாவை, கொட்டியாக்கலை தோட்டத்தின் N.C.பிரிவைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகத் தங்களது ஒரு நாள் சம்பளத்தை ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
நாட்டின் தற்போதைய மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் குறித்த செயற்பாடு அமைந்துள்ளது.
இதன்படி அவர்களிடமிருந்து சுமார் 108,000 ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளதாக  செய்தி வெளியிட்டுள்ளது.
சேகரிக்கப்பட்ட குறித்த தொகையானது தேசிய மக்கள் சக்தியின் (NPP) நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரிடம் உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button