
இந்திய அரசின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பேரிடர் மறுசீரமைப்பு தொகுப்பைக் கையாளும் பொறுப்பு, இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளைக் கொண்ட கூட்டு அதிகாரி குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு திட்டங்கள், கொள்முதல்கள் மற்றும் திட்டங்களை விரைவுபடுத்த இந்தியாவிலிருந்து மனிதவளத்தைப் பயன்படுத்துதல் குறித்து கூட்டுக் குழு முடிவு செய்யும் என்று இலங்கையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வீதி மற்றும் தொடருந்து, சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, விவசாயம் மற்றும் உடனடி பேரிடர் மீட்புக் குழுவை நிறுவுதல் ஆகிய 5 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் ஒன்பது மாதங்களில் திட்டங்களை முடிக்கக் கூட்டுக் குழு, மூன்று காலக்கெடுவின் கீழ் செயற்படும்.
இதேவேளை வீட்டுவசதி, மருத்துவம், கல்வி, தொடருந்து மற்றும் வீதி கட்டுமானம் தொடர்பான மறுசீரமைப்பு திட்டங்களுக்காக, தொழில்நுட்ப ஆதரவு உட்பட இந்தியக் குழுக்கள் இலங்கைக்கு வரவுள்ளன.





