
பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்களுக்காக வழங்க உத்தேசிக்கப்பட்ட 50,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, இதுவரை 3,665 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேரிடர் நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்தக் கொடுப்பனவுக்கு 147,628 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக அதன் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை 25,000 மற்றும் 50,000 ரூபாய் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு காணி உரிமை அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





