இலங்கை

மீண்டும் ஒரு மழைக்காலம்! – 29 ஆம் திகதி முதல்

நாட்டின் கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று அலை (Easterly Wave) வலுவடைவதன் காரணமாக, எதிர்வரும் டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாட்டின் பல மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை வீழ்ச்சி கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வானிலை மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவ்வப்போது வெளியிடும் முன்னறிவிப்புகள் மற்றும் விசேட அறிவித்தல்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அனர்த்த நிலைமைகளைத் தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button