
நாட்டின் பல பகுதிகளில் புயல் ‘திட்வா’ (Cyclone Ditwah) மற்றும் கடுமையான வானிலையால் பரவலான இடையூறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) நீட்டித்துள்ளது.
ஆரம்பத்தில் வரிக் கணக்குகள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக பல வரி செலுத்துவோர் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளால் இந்தத் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று IRD தெரிவித்துள்ளது.
இதன்படி, டிசம்பர் 31, 2025 அன்று அல்லது அதற்கு முன் தங்கள் வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யும் வரி செலுத்துவோருக்கு தாமதமான சமர்ப்பிப்பிற்கான அபராதங்கள், மதிப்பீடுகள் அல்லது குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் விதிக்கப்படாது என்று அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவரை தங்கள் வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யாதவர்கள் இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்





