இலங்கை

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது.

நான்கு மாவட்டங்களிலும் உள்ள 40 மாவட்ட செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, டிசம்பர் 06 – 09 வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரும்பாலும் தென் மாகாணத்தை பாதிக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி கலாநிதிவசந்த சேனாதீர தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், டிசம்பர் 09-13 வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது மத்திய மாகாணத்தை, பெரும்பாலும் மாத்தளை, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் பின்னர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், டிசம்பர் 16-19 திகதிகளில் மீண்டும் மழை பெய்யும் என்றும், மத்திய மாகாணத்தை மீண்டும் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கலாநிதி வசந்த சேனதீரா சுட்டிக்கவிளக்கினார், மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தினார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button